Nov 09, 2019 03:59 AM

அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்! - கொண்டாட்டத்தில் கார்த்தி ரசிகர்கள்

அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்! - கொண்டாட்டத்தில் கார்த்தி ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக திகழும் விஜய்க்கு இந்த தீபாவளி சற்று சறுக்கல் தான். அவரது பிகில் படம் விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தாலும் வசூலில் எந்தவித குறையும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் ‘பிகில்’ படத்தின் வியாபாரத்தில் ஈடுபட்ட விநியோகஸ்தர்களுக்கு எந்தவிதத்திலும் லாபம் இல்லை, என்று பிரபல விநியோகஸ்தர் தெரிவித்தார்.

 

அதே சமயம், எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றே படம் இவ்வளவு பெரிய வசூலை ஈட்டியிருக்கிறது என்றால், நல்ல கதையம்சத்தோடும், அளவான பட்ஜெட்டோடும் தயராகியிருந்தால், அனைவருக்கும் லாபம் கிடைத்திருக்கும், என்றும் அவர் கூறினார்.

 

மறுபக்கம் குறைவான பட்ஜெட்டில் தயாரான கார்த்தியின் ‘கைதி’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது மூன்றாவது வாரத்தில் 350 க்கும் மேற்பட்ட திரையரக்குகளில் ஒடிக்கொண்டிருக்கும் கைதி ரூ.100 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், விஜயின் ‘பிகில்’ படத்தைக் காட்டிலும் கைதியின் வசூல் அதிகரித்திருப்பதாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது.

 

படம் வெளியான போது, பிகில் வசூலே அதிகமாக இருந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் பிகில் படத்தைக் காட்டிலும் கைதி படத்தின் வசூல் 5 சதவீதம் அதிகரித்ததாக ரோகினி திரையரங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து மூன்றாவது வாரத்திலும் படத்திற்கு அதிகமான மக்கள் வருவதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

 

இந்த செய்தி நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், கார்த்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும் இருக்கும்.