Nov 18, 2019 01:12 PM

விஜய் தான் வசூல் மன்னன்! - இதோ புள்ளி விபரம்

விஜய் தான் வசூல் மன்னன்! - இதோ புள்ளி விபரம்

தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான விஜயின் ‘பிகில்’ விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், படத்தின் வசூல் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்று படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து தெரிவித்து வந்ததோடு, தங்களுக்கு படத்தால் பெரிய லாபம் கிடைத்ததாகவும் கூறியது.

 

அதே சமயம், தயாரிப்பாளருக்கு பிகில் படத்தால் லாபம் கிடைத்தாலும், படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை, என்று பிரபல விநியோகஸ்தர் தெரிவித்ததோடு, நஷ்ட்டமும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

 

இதனால், பிகில் படத்தால் லாபமா அல்லது நஷ்ட்டமா, என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டதோடு, பொய்யான தகவல்களை வெளியிட்டு, தயாரிப்பு தரப்பு விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வந்தார்கள்.

 

இந்த நிலையில், இதுவரை தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களில் விஜயின் ‘பிகில்’ தான் முதலிடத்தில் இருப்பதாக விஜய் தரப்பு புள்ளி விபரத்தோடு அறிவித்திருக்கிறது.

 

மேலும், இதுவரை தமிழகத்தில் ‘பாகுபலி 2’ தான் அதிகம் வசூலித்த படமாக இருந்த நிலையில், தற்போது அப்படத்தை பிகில் பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

படத்தின் வசூல் விபரம் இதோ:

 

Bigil Tamilnadu - Updated

 

Week 1 - 102.45 cr

week 2 - 26.15 cr

week 3 - 11.35 cr

4th weekend - 2.8 cr

 

total - 142.75 cr

share - 83 cr ( excluding GST )