விஜய் இயக்குநரின் அடுத்த ஹீரோ பிக் பாஸ் தர்ஷன்!

அட்லீ இயக்கத்தில் விஜய் தொடர்ந்து நடித்த மூன்று படங்களும் பெரிய ஹிட் ஆகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘பிகில்’ கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், வசூலில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 64 வது படத்தில் ஈடுபட்டுள்ளார்.
‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கல்லூரி மாணவராக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்க்கு ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ஹீரோவாக பிக் பாஸ் சீசன் 3-யின் பேவரைட் போட்டியாளரான தர்ஷன் நடிக்கிறாராம். அதே சமயம், முக்கிய வேடம் ஒன்றில் கமலையும் நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டிருக்கிறாராம்.
‘தளபதி 64’ படப்பிடிப்பு முடிந்த உடன், கமல் தயாரிப்பில் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட இருக்கிறாராம்.