Dec 25, 2017 05:54 PM

சிரஞ்சீவிக்கு விஸ்வாசமானவராக மாறிய விஜய் சேதுபதி!

சிரஞ்சீவிக்கு விஸ்வாசமானவராக மாறிய விஜய் சேதுபதி!

‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு மாஸ் ஹீரோவான விஜய் சேதுபதி, தனது சொந்த நிறுவனம் சார்பில் மிகப்பெரிய மாஸ் திரைப்படமாக ‘ஜுங்கா’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார். திரிஷாவுடன் அவர் நடித்த ‘99’ படமும் விரைவில் வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே, முதல் முறையாக விஜய் சேதுபதி தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார். சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘உய்யலவடா நரசிம்ம ரெட்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான நரசிம்ம ரெட்டி என்பவரது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை போராளியாக இருந்த நரசிம்ம ரெட்டிக்கு விசுவாகமாக இருந்த உப்பயாவாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.