Mar 19, 2019 09:58 AM

மகனை களத்தில் இறக்கிய விஜய் சேதுபதி!

மகனை களத்தில் இறக்கிய விஜய் சேதுபதி!

’பண்ணையாறும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக ‘சிந்துபாத்’ படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். தனது இரண்டு படங்களையும் வெவ்வேறு கதைக்களத்துடன் கொடுத்து பாராட்டுப் பெற்ற இயக்குநர் அருண்குமார், சிந்துபாத் படத்தையும் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

 

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார். அதேபோல், சேதுபதி படத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த லிங்கா, இப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்திருக்கிறார். இதற்காக அவர் 10 கிலோ உடல் எடையை அதிகரித்திருப்பதோடு, தாய்லாந்து மொழியையும் கற்றுக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் ஒரு ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம்.

 

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி, படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும், சூர்யாவும் இணைந்து தென்காசியில் சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபடுவது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் தனது மகனுக்கு சினிமாவில் பெரிய அடையாளம் கிடைக்கும் என்பதால், விஜய் சேதுபதி மகனை களத்தில் இறக்கியுள்ளார்.

 

கே புரொடக்‌ஷன்ஸ் எஸ்.என்.ராஜ்ராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

ஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது, என்பதையும், அதற்கான தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக உருவாகும் ‘சிந்துபாத்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளுக்காக இயக்குநர் அருண்குமார் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார். அதேபோல், படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் துபாயில் நடைபெற்று வருகிறது.