Apr 18, 2020 06:17 AM

விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட படம்! - வைரலாகும் பஸ்ட் லுக் வீடியோ

விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட படம்! - வைரலாகும் பஸ்ட் லுக் வீடியோ

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான விக்ரம், நடிப்பதை நிறுத்தப் போவதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. ஆனால், அது வெறும் வதந்தி, என்று விக்ரம் தரப்பு விளக்கம் அளித்தது. தற்போது, ‘கோப்ரா’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களி நடித்து வரும் விக்ரம், மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

 

இதற்கிடையே, ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு முன்பாகவே சுமார் ரூ.300 கோடியில் தயாராகும் பிரம்மாண்டமான படமான ‘மஹாவீர் கர்ணா’ என்ற படத்தில் விக்ரம் நடிக்க தொடங்கினார். கர்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் சரித்திர படமான இப்படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார்.

 

தமிழ் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சில காலம் நடைபெற்றாலும் பிறகு நிறுத்தப்பட்டது. பிறகு இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாத நிலையில், நேற்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மஹாவீர் கர்ணா’ படக்குழுவினர், அப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சிறு மேக்கிக் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இதன் மூலம், ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதை சூசகமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், அப்படத்தில் விக்ரமின் கெட்டப் எப்படி இருக்கும் என்பதையும், முதல் முறையாக வெளியிட்டுள்ளனர்.

 

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,