விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாக உள்ள விஷால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார். மேலும், நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட வேலைகள் முடிந்த பிறகே திருமணம் செய்துக் கொள்வேன், என்றும் அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையே, விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ஆல்லா ரெட்டி என்ற பெண்ணை காதலிப்பதாகவும், இருவருக்கும் திருமணம் பேசி பெற்றோர்கள் முடித்துவிட்டதாக, தகவல் வெளியான நிலையில், இது குறித்து விஷாலே அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, அனிஷா ஆல்லாவின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், விஷால் - அனிஷா ஆல்லா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில், மணமகளின் வீட்டில் நடைபெற்றது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்கள். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.