Mar 28, 2019 03:18 PM

வெளிநாட்டில் விபத்தில் சிக்கிய விஷால்! - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

வெளிநாட்டில் விபத்தில் சிக்கிய விஷால்! - படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்கியா’ வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார்.

 

ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. 50 நாட்கள் தொடர்ந்து துருக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்ட படக்குழு, சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றது.

 

இந்த நிலையில், துருக்கி மலைப்பகுதியில் விஷால் பங்குபெற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் காரில் செல்லும் வில்லன்களை, விஷால் பைக் மூலம் சேசிங் செய்ய வேண்டும். அதன்படி வில்லன்களை பைக்கில் துரத்திய விஷால், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.

 

இருப்பினும், கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாக, விஷால் மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வில் இருக்க முடிவு செய்திருக்கிறார். இதனால், படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Vishal