Apr 11, 2020 05:41 PM

விஷ்ணு விஷால் நடிப்பில் மீண்டும் ஒரு சைக்கோ படம்!

விஷ்ணு விஷால் நடிப்பில் மீண்டும் ஒரு சைக்கோ படம்!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ராட்ச்சன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சைக்கோ கில்லர் கதையான இப்படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்க, சரவணன் என்பவர் சைக்கோ கொலையாளியாக நடித்திருப்பார்.

 

இந்த நிலையில், மீண்டும் சைக்கோ கொலையாளி கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார். ’மோகன் தாஸ்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், விஷ்ணு விஷால் யாரையோ சுத்தியல் கொண்டு கடுமையாக தாக்கி கொலை செய்வதோடு, ரத்தத்தை தனது உடல் மீது பூசிக்கொள்வது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.

 

ஆக, ‘ராட்சசன்’ படத்தில் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸாக நடித்த விஷ்ணு விஷால், ‘மோகன் தாஸ்’ படத்தில் கொலை செய்யும் சைக்கோ வேடத்தில் நடிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இப்படத்தில் ஒரு கொலை மட்டும் செய்கிறாரா அல்லது தொடர் கொலைகள் செய்கிறாரா, என்பது படத்தை பார்த்தால் தான் தெரியும். தற்போது வெளியாகியுள்ள டீசர், இப்படம் ஒரு சைக்கோ கொலையாளி படமாக இருக்கலாம், என்று தான் நினைக்க தோன்றுகிறது.

 

இதோ அந்த டீசர்,