‘விஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ்! - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

‘விவேகம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெற்றி நாயகியான நயந்தரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க, மற்றொரு ஹீரோயினாக ‘காலா’ புகழ் ஈஸ்வரி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இப்படத்தில் அப்பா, மகன் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும் என்ற ஆவல் பலரிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் சால்ட் அண்ட் பெப்பர் ஹர் ஸ்டைலில் அஜித் வருவார் என்று தகவல் வெளியாக, மறுபக்கம் அஜித் இளைமை தோற்றத்தில் அசத்தப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், படத்தின் பஸ்ட் லுக் எப்படி இருக்கும், என்பதிலும் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ’விஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக்கை இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.