Apr 23, 2019 07:59 AM

”பிரபு சார் இடத்தில் யார்?” - ஆக்ரோஷமான குஷ்பு

”பிரபு சார் இடத்தில் யார்?” - ஆக்ரோஷமான குஷ்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்ததோடு, ரசிகர்கள் கோயில் கட்டும் அளவுக்கு பிரபலமாக இருந்தவர் நடிகை குஷ்பு. தற்போது சீரியல், சினிமா என்று பிஸியாக இருப்பவர், தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

குஷ்பு, தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டிய பல படங்களில் முக்கியமான படம் ‘சின்னதம்பி. பிரபு ஹீரோவாக நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 

தற்போது, ‘சின்னதம்பி’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ள நிலையில், இது குறித்து குஷ்புவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்கக் கூடாது, என்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார்.

 

மேலும், ”வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழ் பேசி ஆடிப்பாடி சிரித்து, அழுதுபுரண்டு நடித்ததை வியந்து பார்த்தனர். அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பி நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார்.

 

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுக்க முழுக்க நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் வேறு எந்த ஹீரோக்கள் நடித்து இருந்தாலும் என்னை அந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டார். 

 

நான் நடித்த நந்தினி வேடத்தில் எந்த நடிகையும் நடிக்கலாம், ஆனால் பிரபு சார், மனோரமா ஆகியோர் நடித்த வேடங்களில் யாரை நடிக்க வைப்பீர்கள்?” என்று கூறியவர், இறுதியாக சின்னதம்பி படத்தை ரீமேக் செய்ய கூடாது, என்றும் கூறினார்.

 

Chinna Thambi