Mar 23, 2019 04:10 AM
‘யாரடி நீ மோஹினி’ சீரியல் நடிகை நட்சத்திராவுக்கு திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமானது ‘யாரடி நீ மோகினி’. இதில் கதாநாயகியாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நட்சத்திரா. சினிமாவில் அறிமுகமான நட்சத்திராவுக்கு வெள்ளித்திரை கைகொடுக்கவில்லை என்றாலும், சின்னத்திரை மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார்.
இந்த நிலையில், நடிகை நட்சத்திராவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. நட்சத்திரா நடித்த முதல் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் தான் மாப்பிள்ளை. இது காதல் கல்யாணமாம்.
இவர்களது காதலுக்கு இரு வீட்டு தரப்பும் சம்மதம் தெரிவித்துவிட்டதால், விரைவில் திருமணம் என்று நட்சத்திராவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.