Nov 09, 2019 01:40 PM

46 வயது நடிகையுடன் திருமணம்! - இளம் நடிகரின் விபரீத முடிவு

46 வயது நடிகையுடன் திருமணம்! - இளம் நடிகரின் விபரீத முடிவு

சினிமா பிரபலங்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வது புதிதல்ல என்றாலும், பிரபல இளம் நடிகர் ஒருவர், திருமணமான பிரபல நடிகையை அதுவும் 46 வயதாகும் நடிகையை திருமணம் செய்வது பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர், பாலிவுட் சினிமாவில் நடிகராக இருக்கும் இவருக்கு 34 வயதாகிறது. இவர், திருமணமாகி 16 வயதில் ஆண் பிள்ளை இருக்கும், 46 வயதுடைய நடிகை மலைகா அரோராவை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார்.

 

Malaika Arora

 

சல்மான் கானின் தம்பியும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானை விவாகரத்து செய்திருக்கும் மலைகா அரோரா, தற்போது அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இவரும் ஒன்றாக ஊர் சுற்றி வரும் நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்களாம்.

 

இவர்களது திருமணம் வெளிநாட்டில் கடற்கரையில் கோலாகலமாக நடக்க இருப்பதாக மலைகா அரோராவே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

Malaika Arora