May 24, 2024 11:45 AM

’ஃபெமினிஸ்ட்’ குறும்பட விமர்சனம்

707a6789ed0d04297d80833339e677c0.jpg

Casting : Mathizhagan, Angelina

Directed By : Cable Shankar

Music By : Shamanth Nag

Produced By : Siva.R, Cable Shankar

 

இலக்கியவாதியான பெண்ணின் எழுத்தாள் ஈக்கப்படும் இலக்கிய ஆர்வமுள்ள ஆண், இருவரும் நட்பு பாராட்டுகிறார்கள். இவர்களுடைய நட்பு காதலையும் கடந்து காமத்துக்குள் செல்ல, அதன் பிறகு இவர்களது காதலும், நட்பும் என்னவானது? என்பதை மிக இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கேபிள் சங்கர்.

 

இந்த குறும்படம், தொடங்கிய நேரம் தெரிந்தாலும், எப்போது முடிந்தது என்று தெரியாத அளவுக்கு படு சுவாரஸ்யமாக அரைமணி நேரத்தை ஆட்கொண்டு விடுகிறது.

 

லாக்டவுன் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கேபிள் சங்கரின் ‘லாக்டவுன் கதைகள்’ புத்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள அந்தாலஜி தொடரின் முதல் எப்பிசோடான இதில், மதியழகன், ஏஞ்சலினா என இரண்டு பேர் மட்டுமே நடித்திருந்தாலும், அவர்களுடைய உரையால், காதல், காமம், மோதல் என அனைத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். 

 

ஆணும், பெண்னும் பழகுவதை மிக எதார்த்தமாக காட்டியிருக்கும் இயக்குநர் கேபிள் சங்கர் அவர்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் கதாபாத்திரங்களாக பயணிக்க வைத்திருப்பதோடு, இருவருக்கும் இடையே ஏற்படும் நெருக்கத்தையும், காமத்தையும் எந்தவித நெருடல் இல்லாமல் ஒரு கவிதையை போல் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

 

முரளி ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, ஷமந்த் நாக்கின் இசை மற்றும் அபிஷேக் க்ரீம் படத்தொகுப்பு அனைத்தும் அளவாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

 

பெண்ணியம் என்பதை ஆண்கள் எப்படி பார்க்கிறார்கள், பெண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அவங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம், என்பதை ஜாலியாகவும், இயல்பாகவும் சொல்லியிருக்கும் இந்த ‘ஃபெமினிஸ்ட்’ - ஒடிடி பிளஸ் தளத்தின் சிறந்த அடையாளமாக திகழும் என்பது உறுதி.

 

ரேட்டிங் 3.7/5