Feb 11, 2019 07:36 AM

நடிகர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் திருமணம்! - பிரபலங்கள் நேரில் வாழ்த்து

நடிகர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் திருமணம்! - பிரபலங்கள் நேரில் வாழ்த்து

இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோ பாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

 

சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இன்று காலை 7.19 மணிக்கு மணமகன் ஹரிஷ், மணமகள் பிரியா கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

 

திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஏராளமான சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.