Apr 02, 2019 05:37 PM

தூக்கிவிட்ட இயக்குநருக்கு தோள் கொடுத்த சூர்யா!

தூக்கிவிட்ட இயக்குநருக்கு தோள் கொடுத்த சூர்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா, நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட கூடிய நடிகர் என்றும் பெயர் எடுத்திருக்கிறார். 

 

தனது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்த சூர்யாவை மக்களிடம் கொண்டு சேர்த்த இயக்குநர்களில் முக்கியமானவர் பாலா. அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’ மற்றும் ‘பிதாமகன்’ ஆகிய் படங்கள் சூர்யாவுக்கு பெரும் பாராட்டை பெற்று தந்ததோடு, அவரால் அனைத்து வேடங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கோலிவுட் இயக்குநர்களிடம் ஏற்படுத்தியது.

 

இதற்கிடையே, தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்த பாலா, தற்போது ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, தன்னை தரமான இயக்குநர் என்று மறுபடியும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார். சமீபகாலமாக அவரது படங்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாவதோடு, பாலாவிடம் சரக்கு காலியாகிவிட்டதாகவும், கூறப்படுகிறது.

 

Director Bala

 

இந்த நிலையில், பாலாவின் நிலையை உணர்ந்த நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனத்தில் தன்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள பாலா, விரைவில் சூர்யாவுடன் புது எனர்ஜியோடு களம் இறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Varma

 

சமீபத்தில் பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை தயாரிப்பு தரப்பு குப்பையில் போடப்போவதாக அறிவித்துவிட்டு முதலில் இருந்து படத்தை தயாரிப்பதாக அறிவித்தவுடன், அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே தான் ஒரு படத்தை இயக்கி வெளியிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஆர்யாவுடன் பாலா இணைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யாவுடன் இணைந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

Arya