Apr 09, 2019 02:28 PM

சீரியலுக்கு நோ சொன்ன “கருவாப்பையா..” கார்த்திகா!

சீரியலுக்கு நோ சொன்ன “கருவாப்பையா..” கார்த்திகா!

‘தூத்துக்குடி’ படத்தில் நாயகியாக நடித்த கார்த்திகா, அப்படத்தில் இடம்பெறும் “கருவாப்பையா...கருவாப்பையா...” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

 

’பிறப்பு’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தைரியம்’, ‘மதுரை சம்பவம்’, ‘365 காதல் கடிதம்’, ‘வைதேகி’, ‘நாளைய பொழுதும் உன்னோடு’ ஆகிய படங்களில் நடித்த கார்த்திகா, தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார். 

 

தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய  கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.

 

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகா, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

 

Actress Karthika

 

தற்போது சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கார்த்திகா, நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயார், என்று கூறுகிறார்.