Oct 27, 2020 04:50 AM
முட்டுக்காட்டில் நடிகை குஷ்பு திடீர் கைது

காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய நடிகை குஷ்பு, இன்று காலை திடீரென்று கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து பெண்கள் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அவர் மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் பா.ஜ.க மகளிரணி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. அதன்படி, அக்கட்சியின் இணைந்த நடிகை குஷ்பு, தனது வீட்டில் இருந்து சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு பகுதியில் நடிகை குஷ்புவின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரையும் அவருடன் இருந்த சிலரையும் கைது செய்தனர்.