Apr 03, 2019 05:29 PM

முன்னணி நடிகரை காதலிக்கும் ரெஜினா கெசண்ட்ரா! - இவர் தான் அந்த நடிகர்

முன்னணி நடிகரை காதலிக்கும் ரெஜினா கெசண்ட்ரா! - இவர் தான் அந்த நடிகர்

சென்னையை சேர்ந்த ரெஜினா கெசண்ட்ரா, 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்டநாள் முதல்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘அழகிய அசுரா’ படத்தில் நடித்தவர், பிறகு கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் பிஸியானவர், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மூலம் மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கினார்.

 

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியாக நடித்து வரும் ரெஜினா, தெலுங்கு சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ரெஜினா தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக தெலுங்கு ஊடகங்கள் அவ்வபோது செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், ரெஜினா காதலிக்கும் நடிகர் சாய் தரம் தேஜ் என்பது தெரிய வந்துள்ளது. சாய் தரம் தேஜும், ரெஜினாவும் ‘பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளியானாலும், அப்போதில் இருந்தே இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகி வந்தவர்கள், தற்போது காதலர்களாகி விட்டதாக கூறப்படுகிறது.

 

Regina and Sai Tharam Tej

 

ஆனால், இந்த தகவலை ரெஜினா மற்றும் சாய் தரம் தேஜ் இருவரும் மறுத்து வருகிறார்கள்.