Aug 16, 2020 02:22 PM

’பிக் பாஸ் 4’-க்காக தேர்வான போட்டியாளர்கள்! - இதோ பட்டியல்

’பிக் பாஸ் 4’-க்காக தேர்வான போட்டியாளர்கள்! - இதோ பட்டியல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதன்மை நிகழ்ச்சியாக மக்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் பிக் பாஸின் கடந்த மூன்று சீசன்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், கொரோனா பாதிப்பால் நான்காவது சீசன் இதுவரை ஒளிபரப்பாகவில்லை. அதே சமயம், தெலுங்குப் பிக் பாஸ் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான புரோமோ படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

 

இதற்கிடையே, தமிழ் பிக் பாஸின் நான்காவது சீசன் வரும் செப்டம்பர் மாதம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது இதற்கான விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

 

மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் நான்காவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசன் இடம்பெறும் விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதோடு, போட்டியாளர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பவர்களின் முதல்கட்ட பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதில், நடிகைகள் சுனைனா, அதுல்யா, கிரண், நடிகர் இர்பான், குக் வித் கோமாளி புகழ், நடிகை வித்யூலேகா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

Big Boss 4 Participate

 

இது அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்த இந்த தகவல் வெளியாகியுள்ளது.