இளம் நடிகையால் அதிர்ச்சியடைந்த பிக் பாஸ் 4 குழு! - காரணம் இது தான்

மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் ஒளிபாப்பாக உள்ளது. இதன் புரோமோ வீடியோ ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பானது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் தோன்றி, பிக் பாஸ் 4 விரைவில், என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பிக் பாஸ் போட்டிக்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், நடிகைகள் கிரண், ரம்யா பாண்டியன், புகழ், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத்தும் பிக் பாஸ் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் சம்பளமாக ரூ.1 கோடி கேட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பிக் பாஸ் 4 குழு, தற்போது அவரை போட்டியாளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாம்.