பிக் பாஸ் ஆரவுக்கு திருமணம்! - இந்த நடிகையை தான் மணக்கிறார்

தொலைக்காட்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களும் ரசிகர்களிடம் எளிதியில் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸின் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவரான ஆரவு ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக வலம் வந்ததோடு, அதிகம் ரசிகர்கள் வட்டம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.
பிக் பாஸ் போட்டியில் சக போட்டியாளராக கலந்துக் கொண்ட நடிகை ஓவியா ஆரவை விரட்டி விரட்டி காதலித்ததும், அவருக்காக தற்கொலை முடிவுக்கு போனதும் நிகழ்ச்சியின் ஹைலைட்டாகும். இதற்காகவே ஆரவ், ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக திகழ்ந்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஆரவ், சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதன்படி, இயக்குநர் சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது ‘ராஜ பீமா’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆரவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜோஷ்வா’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ராஹியும், ஆரவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆரவ் - தாஹி ஜோடிக்கு சமீபத்தில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.