Sep 07, 2020 01:41 PM

பிக் பாஸ் ஆரவ் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள் - வைரலாகும் வீடியோ இதோ

பிக் பாஸ் ஆரவ் திருமணத்தில் குவிந்த பிரபலங்கள் - வைரலாகும் வீடியோ இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவ், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தற்போது ‘ராஜபீமா’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், ஆரவ் தனது காதலியான ராஹியை நேற்று திருமணம் செய்துக் கொண்டார். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’ திரைப்படத்தில் ராஹி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

 

ஆரவ் - ராஹி திருமணம் நேற்று எளிமையான முறையில் நடைபெற்றாலும், திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள். 

 

இதோ அந்த வீடியோ,