’பாகுபலி’ பிரபாஸ் படத்தில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்!

கடந்த ஆண்டு தமிழில் அறிமுகமான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11 வது சீசன் தொடங்கியது. இதில், ஆர்ஷி கான் என்பவர் வெற்றி பெற்றார். தற்போது இவருக்கு ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடிக்கும் படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை ஆர்ஷியே தனது வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.
ஆனால், இதை ஏற்காத நெட்டிசன்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காக ஆர்ஷியே இப்படி டுவிட் செய்திருக்கிறார். உண்மையில் என்ன என்பது படக்குழு கூறினால் தான் தெரியும் என்கின்றனர். ஏனெனில் இவர் இதற்கு முன் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக தவறான சில விஷயங்களை டுவிட் செய்திருக்கிறாராம்.