Jul 27, 2020 06:47 AM

தொழிலதிபரை திருமணம் செய்யும் பிக் பாஸ் ஜூலி!

தொழிலதிபரை திருமணம் செய்யும் பிக் பாஸ் ஜூலி!

சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களின் கவனத்தையும், மீடியாவின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலி. அதனால் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, வீர தமிழச்சி என்ற பட்டத்தோடு பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த ஜூலிக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு இருந்தது.

 

நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் காயத்ரி ரகுராமுடன் சேர்ந்துக் கொண்டு ஜூலி செய்த விஷயங்கள் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், அவரை ரசிகர்கள் வறுத்தெடுக்க தொடங்கினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஜூலி மீது ரசிகர்களுக்கு இருந்த வெறுப்பு குறையவில்லை.

 

ஜூலி பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது அவரை நேரடியாக கலாய்க்கும் ரசிகர்கள், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவரை பங்கமாக கலாய்த்தனர். இதனால் வெறுத்துப் போன ஜூலி, ரசிகர்களிடம் தன்னை இதுபோல அவமானப்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், ஜூலியை கலாய்ப்பதை இன்று வரை ரசிகர்கள் நிறுத்தவில்லை.

 

இந்த நிலையில், பிக் பாஸ் ஜூலிக்கு விரைவில் திருமணம் ஆக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், ஜூலி தனது திருமணம் குறித்து ரகசியம் காப்பதால், அவரது நண்பர்கள் கூட அது குறித்து எங்கும் பேசுவதில்லையாம். திருமண தேதி முடிவான பிறகு, மாப்பிள்ளை யார்? என்பதை ஜூலி அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.