Aug 12, 2020 09:22 AM

தமிழ் ’பிக் பாஸ் 4’ தொடங்கும் தேதி வெளியானது!

தமிழ் ’பிக் பாஸ் 4’ தொடங்கும் தேதி வெளியானது!

டிவி நிகழ்ச்சிகளில் நம்பன் ஒன் நிகழ்ச்சியாக பிக் பாஸ் திகழ்கிறது. இந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற இந்த நிகழ்ச்சி தென்னிந்தியாவிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான மூன்றாவது சீசன் மிகப்பெரிய சக்சஸ் என்று கூறப்படுகிறது.

 

எனவே, நான்காவது சீசனை மிகப்பெரிய அளவில் நடத்த பிக் பாஸ் குழு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பாதிப்பால் நிகழ்ச்சி ஒளிபரப்பு தள்ளி போயுள்ளது. இருப்பினும், பிக் பாஸ் சீசன் 4 நிச்சயம் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி தரப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.

 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்காவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ள நிலையில், விரைவில் அதற்கான விளம்பர படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.

 

இன்னும் சில நாட்களில் கமல்ஹாசனை வைத்து பிக் பாஸ் சீசன் 4 விளம்பரப் படம் எடுக்க இருப்பதோடு, செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் பிக் பாஸ் நான்காவது சீசனை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

 

இந்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளதால், பிக் பாஸ் ரசிகர்களை இந்த வருடம் விஜய் டிவி ஏமாற்றது என்பது உறுதியாகியுள்ளது.