Aug 31, 2020 04:38 PM

'குருடனின் நண்பன்' குறும்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

'குருடனின் நண்பன்' குறும்படத்திற்கு குவியும் பாராட்டுகள்

கோடம்பாக்க பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது ‘குருடனின் நண்பன்’ என்ற குறும்படம். முரளி.கே என்பவர் இயக்கியிருக்கிறார். இவர் ‘முகவனி’ புகழ் இயக்குநர் வி.இசட்.துரையிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

 

மனோ, மில்லர் ஆகியோர் நடித்திருக்கும் இந்த குறும்படத்திற்கு SPURUGEN பால் இசையமைக்க, கே.கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏவிஎஸ் பிரேம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

ஒளி நாடா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘குருடனின் நண்பன்’ குறும்படம் நேற்று திரையுலக பிரபலங்களால் யூடியுபில் வெளியிடப்பட்டது. நடிகர்கள் பிரேம்ஜி, டேனியல் பாலாஜி , கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக், வெற்றி சுடலை, தயாரிப்பாளர்கள் பிக் பிரிண்ட் கார்த்திக், லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் அவர்கள் படத்தை வெளியிட்டு பாராட்டினர்.

 

Gurudanin Nanban

 

கமர்சியல் குறும்படத்துக்கு நடுவுல கன்டென்டோட ஒரு சிறுகதை போல  'குருடனின் நண்பன்' இருந்ததாக, நடிகர் டேனியல் பாலாஜி பாராட்டினார்.

 

கடந்த வாரம் இந்த  குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இந்த குழுவினரை வெகுவாக பாராட்டினார் வி இசட் துரை. குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.