Jun 12, 2018 06:07 AM
கார் விபத்தில் சிக்கிய மோகன்லால் பட நடிகை!

கேரளாவில் நடந்த கார் விபத்தில் பிரபல நடிகை சிக்கி காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகன்லாலின் ‘நீரளி’ படத்தில் நடித்து வரும் நடிகை மேகா மேத்தியூஸ், தனது சகோதரரின் நிச்ச்யதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தன வீட்டில் இருந்து காரில் கிளம்பியுள்ளார். கொச்சி - எர்ணாகுளம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரில் வந்த கார் நடிகையின் கார் மீது மோதியதில் அது கவிழ்ந்தது.
விபத்து முடிந்து 15 நிமிடங்கள் நடிகை மயக்கமாக காருக்குள் கிடந்துள்ளார். யாரும் உதவிக்கு வராத நிலையில் ஒரு போட்டோகிராபர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேகா மேத்தியூஸ், காரில் இருந்த ஏர் பேக் மூலம் அவர் உயிழ் தப்பியதாக கூறப்படுகிறது.