Jan 08, 2018 09:23 AM

ஓவியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்த வசூல் நடிகர்!

ஓவியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்த வசூல் நடிகர்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா இந்த படத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், என்று பல தகவல்கள் வெளியானாலும், தற்போது ஓவியா என்னவோ லாரன்ஸுடன் ‘காஞ்சனா 3’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், அவர் கேட்கும் சம்பள தொகையால் தயாரிப்பாளர்கள் திரும்பி சென்று விடுகிறார்கள்.

 

இந்த நிலையில், தற்போது விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியாக வசூல் மன்னனாக தமிழ் சினிமாவில் வலம் நடிகர் ஓவியாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். காரணம், இவர் ஹீரோவாக அறிமுகமானதே ஓவியாவின் படத்தில் தான்.

 

ஆம், சிவகார்த்திகேயன் தான் அந்த நடிகர். ‘மெரினா’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஓவியா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், ”என்னுடைய முதல் நாயகி ஓவியா. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவருடைய அம்மா இறந்தது தெரியவந்தது. பிறகு நான் அவர்களது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினேன். மெரினா பட வேலைகளில் எப்போதும் அவர் எங்களுடன் இருப்பார். நான், ஓவியா, சதீஷ் மூவறும் கூட அவருக்கு உதவியாக இருப்போம்.

 

எனக்கு நல்ல நண்பர்களில் ஓவியாவும் ஒருவர். எனது முதல் நாயகியான அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.