Feb 10, 2018 02:19 PM

ஒரு ஏக்கரில் பிரம்மாண்டமான வீடு கட்டும் தமிழ் சினிமா இயக்குநர்!

ஒரு ஏக்கரில் பிரம்மாண்டமான வீடு கட்டும் தமிழ் சினிமா இயக்குநர்!

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் தான் பல கோடிகளை சம்பளமாக வாங்குவதோடு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமான வீடுகளையும் கட்டி வருகிறார்கள். விஜய், அஜித், விக்ரம் என்று பல நடிகர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கப்பல் போல வீடுகளை கட்டிவர இவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு மிக பிரம்மாண்டமான வீடு ஒன்றை பிரபல இயக்குநர் கட்டியுள்ளார்.

 

அவர் யாருமல்ல, பிரம்மாண்டத்திற்கு பேர் போன இயக்குநர் ஷங்கர் தான். தமிழ் சினிமாவிலேயே அதிக பட்ஜெட் படம் என்ற பெருமையோடு உருவாகி வரும் ரஜினியின் '2.0’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஷங்கர், மறுபுறம் தனது பிரம்மாண்ட வீட்டின் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

 

கிழக்கு கடற்கரை சாலையில் மாயாலாஜை தாண்டி, ஒரு ஏக்கரில் வீடு கட்டி வருபவர், வீட்டின் கட்டுமான பணிக்காக மட்டும் ரூ.15 கோடி செலவு செய்துள்ளாராம். அது தவிர ஒரு ஏக்கரின் நிலத்தின் விலை பல கோடியாம்.

 

கடலுக்கு அருகில் கப்பல் போல, அனைத்து வசதிகளையும் கொண்ட வீடாக தனது வீட்டை கட்டி வரும் இயக்குநர் ஷங்கர், வீட்டில் சகலமும் இருக்க வேண்டும், என்பதற்காக சில வெளிநாட்டு உதாரணங்களையும் ஒப்பிட்டு தனது வீட்டை உருவாக்கி வருகிறாராம்.