Apr 03, 2019 07:10 AM

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை!

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள மோகன் பாபு, தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து ‘சலீம்’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை ஒய்விஎஸ் செளத்ரி இயக்கியிருந்தார்.

 

இந்த நிலையில், இயக்குநர் ஒய்விஎஸ் செளத்ரி, ‘சலீம்’ படத்திற்காக தனக்கு ழங்கப்பட்ட செக் செல்லுபடி ஆகததால், இது குறித்து மோகன் பாபுவிடம் கேட்க, அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. உடனே இது தொடர்பாக நீதிமன்றத்தில் இயக்குநர் செளத்ரி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு விசாரணை தற்போது முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், நடிகர் மோகன் பாபுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், 41 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஆனால், இந்த தகவலை மறுத்திருக்கும் மோகன் பாபு, தனது ட்விட்டர் பக்கத்தில், சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.