Apr 08, 2019 02:15 PM

ரசிகர் செய்த செக்ஸ் சில்மிஷம்! - மருத்துவமனையில் பிரபல சீரியல் நடிகை

ரசிகர் செய்த செக்ஸ் சில்மிஷம்! - மருத்துவமனையில் பிரபல சீரியல் நடிகை

பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராணி. பெரும்பாலான சீரியல்களில் வில்லியாகவே நடிக்கும் ராணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

 

இவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த செக்ஸ் தொல்லையால், ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சம்பவம் பற்றி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது, நீதிமன்றம் தற்போது பிரான்க் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளது. அதற்கு நடிகை ராணி வரவேற்பு தெரிவித்திருப்பதோடு, அதற்கான காரணத்தை கூறுகையில்,  ”ஒரு சீரியல் படப்பிடிப்பில் மதிய உணவு சாப்பிட்டு ஸ்பாட்டுக்கு வந்தேன், அப்போது ஒருவர் எனது கையொப்பம் வேண்டும் என்று கேட்டார், நானும் போட்டேன். பிறகு போட்டோ எடுக்க கேட்டார் ஒப்புக்கொண்டேன், அவர் அந்த நேரத்தில் என் பக்கத்தில் வந்து கொஞ்சம் மோசமாக உரசி புகைப்படம் எடுத்தார்.

 

அப்போதும் அவர் செல்லவில்லை என்னதான் வேண்டும் என்று கேட்டால் நீதான் வேண்டும் என்றார், அப்படியே பயந்துவிட்டேன். உடனே காதுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக கத்தினார், அந்த நொடி என்னால் மறக்கவே முடியாது.

 

அவர் கத்தியதால் எனது காது சரியாக கேட்கவில்லை, அவர் செய்த காரியத்தால் பயந்து போனதால் இரண்டு நாள் பேச்சே வரவில்லை, மருத்துவமனையில் 1 வாரம் சிகிச்சை பெற்றேன். ஆனால் நான் பட்ட அத்தனை கஷ்டத்துக்கு பின்பு தான் தெரிகிறது, அவர்கள் என்னிடம் அப்படி செய்ததற்கு பின் பிரான்க் ஷோ என்று. அதனால் தான் பிரான்க் ஷோ செய்ய கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது சந்தோஷமளிக்கிறது,” என்று கூறியுள்ளார்.

 

ராணிக்கு நேர்ந்த இந்த கொடுமை, பிரான்க் ஷோ-வினால் என்றாலும், நடிகை என்றாலே பிரான்க் ஷோவில் கூட செக்ஸ் சில்மிஷத்தை வைத்து தான் செய்ய வேண்டுமா? என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் அந்த பிரான்க் ஷோ குழுவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.