Jan 09, 2018 08:17 AM

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா!

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா!

தினேஷ் செல்வராக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்திற்கு ‘துப்பாக்கி முனை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

 

சிம்புவின் உறவினர் எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ராசா மதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஹீரோயின் தேர்வும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 

இந்த நிலையில், இப்படத்திற்கு ஹீரோயினாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’ பொங்கலுக்கு வெளியாக உள்ளது. மேலும், அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.