Apr 08, 2019 02:34 PM

ஹரீஷ் கல்யாணின் அடுத்தப் படம் ‘தனுசு ராசி நேயர்களே’

ஹரீஷ் கல்யாணின் அடுத்தப் படம் ‘தனுசு ராசி நேயர்களே’

’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கலயாண் நடிக்கும் புது படத்திற்கு ‘தனுசு ராசி நேயர்களே’ என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளது.

 

பிரபல நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் மகனும், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவருமான சஞ்சய் பாரதி இயக்கும் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.

 

தற்போது இப்படத்தின் ஹீரோயின் தேர்வில் ஈடுபட்டிருக்கும் இயக்குநர் சஞ்சய் பாரதி, படம் குறித்து கூறுகையில், “நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். ஆத்திகரோ, நாத்திரகரோ, கடுமையாக நம்பிக்கை அல்லது வேடிக்கையாகவாவது அதை கவனிக்கிறார்கள். 'தனுசு ராசி நேயர்களே' என்று பெயரிட காரணம், அது மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. கூடுதலாக, நாயகன் ஹரீஷ் கல்யாண் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர் தான். இந்த ராசிக்கான அடையாளம் ஒரு வில் அம்பு வைத்திருப்பவர். இது லட்சிய நோக்கத்ததை குறிக்கிறது. இதேபோல், இந்த படத்தில் உள்ள ஹீரோ குறிக்கோளுடன் இருப்பவர், அவருடைய வாழ்க்கையில் நடப்பவை தொடர்ச்சியான சம்பவங்களின் மூலம் வெளிப்படுகிறது. எங்கள் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க ஒப்புக் கொண்டதை விடவும், வேறுபட்ட கதையம்சம் உள்ள திரைக்கதைகளை அவர் தேர்ந்தெடுப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது முந்தைய படங்கள் ரோம்-காம் மற்றும் ஆழ்ந்த காதல் கதையை அடிப்படையாகக் கொண்டவை. அவர் நினைத்திருந்தால் அது போன்ற படங்களில் நடித்து வெற்றியை கொடுத்திருக்க முடியும். ஆனாலும், இது போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க முயற்சி செய்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர்.” என்றார்.

 

Director and Actor Sanjay Bharathi