Apr 08, 2019 10:57 AM

விஜய்க்காக உருவாகும் ஹைடெக் விளையாட்டு மைதானம்! - புகைப்படங்கள் இதோ

விஜய்க்காக உருவாகும் ஹைடெக் விளையாட்டு மைதானம்! - புகைப்படங்கள் இதோ

’சர்கார்’ வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதாலும், விஜயின் இரண்டு படங்களும் அரசியல் பேசியதாலும், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்றாலும், படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், ராயபுரம் அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் ரசிகர்களால் பெரும் தொந்தரவு ஏற்பட்டதாகவும், பிறகு போலீஸ் உதவியுடன் படப்பிடிப்பை முடித்ததாகவும் கூறப்பட்டுகிறது. இதையடுத்து, இனி பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று படக்கு எடுத்த முடிவுக்கு விஜயும் ஓகே சொல்லிவிட்டாராம்.

 

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிப்பதோடு, விளையாட்டுத் துறையில் நடைபெறும் மோசடி குறித்து காரசாரமாக பேசுகிறாராம்.

 

இந்த நிலையில், இப்படத்திற்காக ஹைடெக் வசதிகளுடன் கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். சென்னையடுத்துள்ள பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் தான் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

 

அச்சு அசலாக சர்வதேச விளையாட்டு மைதானமாகவே உருவாகும் இந்த ஸ்டேடியத்தை உருவாக்க தயாரிப்பு தரப்பு ரூ.5 கோடியை செலவு செய்திருக்கிறதாம்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Thalapathy 63

 

Thalapathy 63

 

Thalapathy 63