Apr 03, 2019 07:18 AM

’ஜேம்ஸ் பாண்ட்’ பட நடிகை மரணம்!

’ஜேம்ஸ் பாண்ட்’ பட நடிகை மரணம்!

‘ஜேம்ஸ் பாண்ட்’ ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகை டனியா மல்லெட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

 

உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் படமான ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையில், மூன்றாவதாக வெளியான படம் ‘கோல்ட் பிங்கர்’. 1964 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்டாக நடிக்க, கய்ஹமில்டன் இயக்கியிருந்தார்.

 

இதில், ஜேம்ஸ் பாண்டின் காதலியாக டனியா மல்லெட் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு பெரிய படங்களில் நடிக்காத டனியா மல்லெட், சினிமாவை விட்டு விலகியதோடு, அதன் பிறகு டிவி தொடர்களில் நடித்ததோடு, மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.

 

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டனியா மல்லெட், மரணம் அடைந்ததாக ஜேம்ஸ் பாண்ட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.