எப்படி இருந்த ஜூலி இப்படி ஆயிட்டாரே! - புகைப்படம் உள்ளே

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து சினிமா ஹீரோயினாகிவிட்டார். தற்போது ‘உத்தமி’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அவர், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளிணியாகவும் பணியாற்றி வருகிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் போராளி என்று பெயர் எடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியால் தமிழக மக்களின் வெறுப்பை பெற்றுவிட்டார். இருந்தாலும், கடை திறப்பு, வெளிநாட்டு கலை நிகழ்ச்சி என்று ஜூலி, சம்பாதிப்பதில் குறியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ‘உத்தமி’ பட்த்தில் ஜூலி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்த தோற்றத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை வைத்து ஜூலியை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள்.
#Julie new look #Uthami #JulieArmy #JulieAsHeroine pic.twitter.com/4U8cQWAxbI
— CinemaInbox (@CinemaInbox) January 21, 2018