Nov 08, 2020 04:53 AM

கமல் நடிப்பில் மீண்டும் ‘விக்ரம்’

கமல் நடிப்பில் மீண்டும் ‘விக்ரம்’

’கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த லோகேஷ் கனகராஜ், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளார். மாஸ்டர் வெளியாவதற்கு முன்பாக அவரது இயக்கத்தில் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், கமல்ஹாசன் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 

கமல்ஹாசனின் 232 வது படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாக, கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டனர். அதன்படி படத்திற்கு ‘விக்ரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான படங்களில் மிக பிரம்மாண்டமான படமாக கருதப்படும் ‘விக்ரம்’ தலைப்பில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பதால், இப்படமும் மிக பிரம்மாண்டமான அதே சமயம், ஹாலிவுட் தரத்திலான படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.