Apr 04, 2019 11:38 AM

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகும் ‘கேஜிஎப்’ நடிகர்!

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகும் ‘கேஜிஎப்’ நடிகர்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘கே.ஜி.எப்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான யாஷ், ஹீரோவாக நடித்த இப்படம், கன்னடம் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

 

வளர்ந்து வரும் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய இப்படத்தின் மேக்கிங் மற்றும் பிரம்மாண்டம் பெரிதும் பாராட்டப்பட்டது. கோலார் தங்க வயலை கதைக்களமாக கொண்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்த கருடாராம், தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

 

Actor Karuda Ram

 

‘தேவ்’ படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு ’ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் கன்னட நடிகர் கருடாராம், வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக பிரபல் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

 

Karthi