Apr 10, 2019 05:28 AM

”குஷ்புவுக்கு வயதாகிவிட்டது”! - அமைச்சரின் ஆபாச பேச்சால் பரபரப்பு

”குஷ்புவுக்கு வயதாகிவிட்டது”! - அமைச்சரின் ஆபாச பேச்சால் பரபரப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்த குஷ்பு, தற்போது சீர்யல்களில் நடிப்பதோடு, சொந்தமாக திரைப்படம் மற்றும் சீரியல்களையும் தயாரித்து வருகிறார். அதே சமயம் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

தற்போது, பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள குஷ்புவை அமைச்சர் ஒருவர், ஆபாசமாக விமர்சித்திருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அவர் பங்குபெறும் பிரசார கூட்டத்திற்கு மக்களின் பெரும் ஆதரவு தருகிறார்கள்.

 

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், குஷ்புவின் பிரசாரம் குறித்து கேட்டதற்கு, “நடிகர், நடிகைகள் என்றாலே கூட்டம் கூடத்தான் செய்யும், அதேபோல் தான் குஷ்புவுக்கும். ஒரு காலத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். ஆனால், இப்போது அவருக்கு வயதாகி விட்டது. அவருக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறிவிடாது.” என்றார்.

 

Sellur Raju

 

நடிகை ஒருவரை பார்த்து அவருக்கு வயதாகிவிட்டது, என்று அமைச்சர் கூறியதில், மறைமுகமாக அவரை ஆபாசமாக சீண்டியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

 

மேலும், தெர்மாகோல் விவகாரத்தில் இன்ஜினியர்கள் தவறு செய்துவிட்டதாகவும், செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.