Jan 08, 2018 01:19 PM

சீண்டிய ஜால்ட்ரா குமாரு - கொதித்தெழுந்த குஷ்பு!

சீண்டிய ஜால்ட்ரா குமாரு - கொதித்தெழுந்த குஷ்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த குஷ்பு, தற்போது அரசியல் திரைப்பட தயாரிப்பு என்று பிஸியாக இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, அவ்வபோது பல சர்ச்சைக்குள் சிக்குவதும், சர்ச்சையான விவாதங்களில் பங்கேற்பதும் என்று எப்போதும் பரபரப்போடு தான் இருப்பார்.

 

இதற்கிடையே, தொடர் பிரச்சினைகள் காரணமாக ட்விட்டரில் இருந்து திடீரென்று வெளியேறிய குஷ்பு, தற்போது மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாக பதிவிட்டு வரும் நிலையில், சமீபத்தில் ஒருவரை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

”ஒருத்தன் ரொம்ப படுத்துரான்....டேய், நீ தலைகீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான். வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு தீயா வேலை செய்யனும் குமாரு..வெரும் ஜால்ட்ரா அடிச்சி கூஜா தூக்குன நீ வெலங்கன மாதிரிதான்...போடா...எதாவது வேலை பாரு..” என்று குஷ்பு ஒருவரை திட்டியிருக்கிறார். ஆனால், அவர் யாரை திட்டுகிறார் என்று குறிப்பிடவில்லை.

 

குஷ்பு திட்டியிருக்கும் அந்த நபர் யாராக இருக்கும், என்ற ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டுள்ளதால், தற்போது ட்விட்டர் பக்கமே படு சூடாகியிருக்கிறது.