வனிதாவுக்கு எதிராக லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி நடவடிக்கை

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் யுடியுப் சேனல் ஒன்றில் வனிதா விஜயகுமார் மற்றும் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்ற கலந்துரையாடலில், லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா மிக கடுமையாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில், “போடி...” என்று ஒருமையிலும் வனிதா பேசினார்.
இதற்காக வனிதாவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனார். மேலும், லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர், இது தொடர்பாக வனிதா மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நடிலை லட்சுமி ராமகிருஷ்ணனும், அவரது கணவரும் அவர்களுடைய வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமாருக்கு, குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். மேலும், வடபழனி பெண்கள் காவல் நிலையத்தின் ஆய்வாளர், வடபழனி போலீஸ் துணை ஆணையர், மற்றும் தமிழ்நாடு பெண்கள் ஆணையம் ஆகியோருக்கும் நோட்டீசின் நகல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.