Mar 30, 2019 12:56 PM

“நயன்தாராவிடம் பேசவே பயமாக இருந்தது” - பிரபல நடிகர் ஓபன் டாக்

“நயன்தாராவிடம் பேசவே பயமாக இருந்தது” - பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வரும் நடிகை நயன்தாரா, ஹீரோக்களுக்கு நிகராக, தான் நடிக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களின் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியான ‘ஐரா’ கலவையான விமர்சங்களை பெற்றாலும், மக்களிடம் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

இதற்கிடையே, ‘ஐரா’ படத்தில் பவானி என்ற வேடத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் காதலராக நடித்திருக்கும் கலையரசன், சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா, குறித்து பேசுகையில், அவரிடம் பேசவே தனக்கு பயமாக இருக்கும், என்று தெரிவித்துள்ளார்.

 

Kalaiyarasan

 

இது குறித்து மேலும் கூறிய கலையரசன், “நாயாந்தரவிடம் பேசவே எனக்கு பயமாக இருந்தது. அவர் பெரிய ஸ்டார். இருந்தாலும் கேஸூவலாக பழகினார். நடிக்கும்போது ரோலாகவே மாறிவிடுகிறார். அதனால் நான் அவர் நயன்தாரா என்பதையே சில சமயங்களில் மறந்துவிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.