Apr 08, 2019 07:19 AM

ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதோடு, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது விஜய், ரஜினி ஆகியோரும் ஜோடியாக நடிக்கிறார்.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா, அப்படியே இளம் நாயகி ஒருவருக்கு அம்மாவாகவும் நடிப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

 

ஆம், முருகதாஸ் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்துக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். 23 வயதாகும் நிவேதா, ’பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருப்பதோடு, சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இவருக்கு தான் நயன்தாரா, அம்மாவாக நடிக்கப் போகிறாராம்.

 

Nivetha Thomos

 

’விஸ்வாசம்’ படத்தில் அனிகாவுக்கு அம்மாவாக நடித்த சரி, 34 வயதில், 23 வயது பெண், அதுவும் ஹீரோயின் ஒருவருக்கு அம்மாவாக நடிக்க நயன் சம்மதித்தது எப்படி, என்று ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் கேள்வியை எழுப்பியுள்ளது.

 

மேலும், இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியிருப்பதாக வெளியான தகவல் வெறூம் வதந்தி என்று படக்குழு அறிவித்திருக்கிறது.