Apr 10, 2019 05:53 PM

பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நயன்தாரா! - அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நயன்தாரா! - அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்ற தனது கொள்கையை தளர்த்தி தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அதன்படி, விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருபவர், ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். அதேபோல், தெலுங்கில் ‘சயிரா நரசிம்ம’ படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

 

இப்படி ஹீரோக்களுடன் மீண்டும் டூயட் பாட ஆரம்பித்திருக்கும் நயன்தாராவுன் மீண்டும் ஜோடி போட பல முன்னணி நடிகர்கள் விரும்புகிறார்கள். தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு முன்னணி ஹீரோக்களும் நயனை ஜோடிக்க விரும்புவதால், அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருகிறதாம்.

 

அதே சமயம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாராவை, தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான நாகர்ஜூனா தனது ‘பங்கர்ராஜு’ படத்தில் ஹீரோயினாக நடிக்க அழைத்தாராம். 

 

Nagarjuna

 

ஆனால், நயன்தாராவோ தன்னிடம் தேதி இல்லை, என்று கூறி அவருடன் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால், தெலுங்கு திரையுலகம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.