விக்னேஷ் சிவன் மீது வழக்கு! - நயன்தாரா பட தயாரிப்பாளர் அதிரடி

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐரா’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தற்போதும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘கொலையுதிர் காலம்’.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தான், நடிகர் ராதாரவி எக்குதப்பாக பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த நிலையில், கொலையுதிர் காலம் படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநரும் நயனின் காதலருமான விக்னேஷ் சிவன், படம் முழுமையாக முடியவில்லை, என்று கூறினார். இது படக்குழுவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
படம் முடிவடைந்து, வியாபாரம் குறித்த பேச்சு வர்த்தை தொடங்க இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன், படம் முடிவடையவில்லை, என்று கூறியிருப்பது படத்தின் வியாபாரத்திற்கு பின்னடைவை தரும் என்பதால், தவறான தகவல் வெளியிட்ட விகெனேஷ் சிவன், மீது தயாரிப்பு தரப்பு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் ‘பில்லா 2’, கமல்ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோல்டி ’கொலையுதிர் காலம்’ படத்தை இயக்கியுள்ளார்.