Aug 13, 2020 06:53 AM

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புது திருப்பம்! - இவ்வளவு கோடிக்காக கொல்லப்பட்டாரா?

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புது திருப்பம்! - இவ்வளவு கோடிக்காக கொல்லப்பட்டாரா?

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி வரும் நிலையில், தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அவர் மரணத்திற்கு பின்னணியில் பல பெரும்புள்ளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

இதற்கிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவின், மரணம் விபத்து அல்ல என்றும், அதுவும் கொலை தான் என்றும் சிலர் கூறி வந்த நிலையில், ரூ.240 கோடி காப்பீட்டு தொகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம், என்று இயக்குநர் சுனில் சிங் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

 

ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டில் மூழ்கி உயிரிழந்தார். இதற்கு காரணமாக, அவர் அதிக மது போதையில் இருந்ததால், மயங்கிய நிலையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார், என்று கூறப்பட்டது. 

 

ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் வேத் பூஷன் கூறியதோடு, தனது ஆராய்ச்சிக்கு பின் சில தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.

 

அதேபோல், இயக்குநர் சுனில் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால் ரூ.240 கோடி காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று இருக்கிரது. 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 4.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும், என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். ஆனால், இந்த மனுவை அப்போது விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

Sridevi

 

இந்த நிலையில், நடிகர் சுஷாந்த் வழக்கு விசாரணையைப் போல், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதோடு, சமூக சமூக வலைதளத்தில் #CBIEnquiryForSridevi என்ற ஷேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக பல சந்தேகங்களையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.