Apr 11, 2019 06:06 AM

பிரான்ஸ் நாட்டு திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’

பிரான்ஸ் நாட்டு திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தி, இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றிப் பெற்ற இப்படம், பட தளங்களில் கெளரவிக்கப்பட்டு வருகிறது.

 

படம் வெளியாகி பல மாதங்கள் ஆன பிறகும், பல வெளிநாட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவது இப்படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

 

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்படத்திருவிழாவில் ‘பரியேறும் பெருமாள்’ திரையிடப்பட உள்ளது. திரையரங்குகளில் வெளியாகாத புதிய திரைப்படங்கள் மட்டுமே பங்கேற்பது தான் வழக்கம் என்றாலும், வழக்கத்திற்கு மாறாக திரையரங்கில் வெளியாகி பல மாதங்கள் ஆன பிறகும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை திரையிட விழா குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Pariyerum Perumal