Oct 20, 2020 01:35 PM

பாபி சிம்ஹாவை இயக்கும் வாரிசு இயக்குநர்!

பாபி சிம்ஹாவை இயக்கும் வாரிசு இயக்குநர்!

தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களின் பட்டியலில் உள்ள, ‘அவள் அப்படித்தான்’, ‘கடலோர கவிதைகள்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘சீவலப்பேரி பாண்டி’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய கே.ராஜேஷ்வர், ‘அமரன்’, ‘அதே மனிதன்’, ‘இந்திர விழா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியும் உள்ளார். இவரது மகன் விக்ரம் ராஜேஷ்வர், தற்போது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 

5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் விக்ரம் ராஜேஷ்வர், கோலிவுட்டில் இயக்குநராக கால் பதிக்கும் தனது முதல் படத்திற்கு பாபி சிம்ஹாவை ஹீரோவாக தேர்வு செய்துள்ளார். 

 

K Rajeshwar

 

கே.ராஜேஷ்வர் கதை, திரைக்கதை வசனத்தில் உருவாகும் இப்படம் கேங்க்ஸ்டர் படமாகும். இப்படத்தின் கதையை கேட்டவுடன் ஓகே சொன்ன பாபி சிம்ஹா, தனது சினிமா பயணத்தில் இப்படம் முக்கியமான படமாக அமையும், என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

 

தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.