Sep 07, 2020 10:42 AM

2வது திருமணம் செய்துக் கொண்ட பிரபல கோலிவுட் நடிகர் - இதோ புகைப்படங்கள்

2வது திருமணம் செய்துக் கொண்ட பிரபல கோலிவுட் நடிகர் - இதோ புகைப்படங்கள்

பணம், புகழ் என்று இருக்கும் நடிகர், நடிகைகள் பலரின் திருமண உறவு பாதியிலேயே முறிந்து விடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதே சமயம், விவாகரத்து பெற்ற நடிகர், நடிகைகள் பலர் மறுமணமும் செய்துக் கொள்கிறார்கள். அந்த வகையில், தனது காதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகர் விஷ்ணு விஷால், தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

 

‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது.

 

இதற்கிடையே, தனது காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்த நிலையில், அவரது பிறந்தநாளான இன்று, எளிமையான முறையில் மோதிரம் மாற்றி அவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Vishnu Vishal and Jwala Gutta

 

Vishnu Vishal and Jwala Gutta

 

Vishnu Vishal and Jwala Gutta